புதுக்குடியிருப்பில் திடீரென மாயமான இளைஞனின் தொலைபேசி மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை

புதுக்குடியிருப்பில் திடீரென மாயமான இளைஞனின் தொலைபேசி மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை

by ilankai

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம்  இரவு சுமார் 7 மணியளவில், குறித்த இளைஞனின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள விடியல் விளையாட்டு மைதானத்தில் உள்ள கிணற்று கட்டில் இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.கிணற்றுக்குள் குறித்த இளைஞருடையதாக கருதப்படும் காலணி ஒன்று காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக தேடுதல், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.மேலும் குறித்த இளைஞன் தொடர்பான தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0701316536 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு  கேட்டுள்ளனர்.

Related Posts