இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தன், கட்டிங்கன் ரீஜென்சி, கசோங்கன் மார்க்கெட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வரிசையான கடைகளில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டது. மார்க்கெட்டில் திடீரென பற்றிய தீ அங்கிருந்த குடியிருப்புக்களில் ஒவ்வொன்றாக பரவி அந்தப்பகுதியிலுள்ள ஒட்டுமொத்த குடியிருப்புக்களிலும் பற்றி எரிந்துள்ளது. அத்துடன் அங்கிருந்த கடைகளும் வரிசையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. காடுகளில் எவ்வாறு தீப்பற்றி அடுக்கடுக்காக பரவுமோ அவ்வாறே குடியிருப்புக்களும் அடுக்கடுக்காக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. வேகமாக தீ பரவியதால் குடியிருப்புக்கள், கட்டடங்கள் அழிந்துள்ளன. தீ விபத்தால் நிகழ்ந்த உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. தீ விபத்தையடுத்து தீயணைப்பு வாகனங்களும் அதிகாரிகளும் விரைந்து தீயைக்கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீ பரவி குடியிருப்புக்களில் பற்றி எரியும் காட்சி வெளியாகி உலுக்குலைய வைத்துள்ளது.
இந்தோனேசியாவில் பாரிய தீ விபத்து; பற்றி எரியும் குடியிருப்புக்கள்- உலுக்குலைக்கும் காட்சி!
2
previous post