🚨 வெள்ளவத்தையில் அதிரடி நடவடிக்கை: 3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன்...

🚨 வெள்ளவத்தையில் அதிரடி நடவடிக்கை: 3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கைது! – Global Tamil News

by ilankai

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் மிக நெருங்கிய உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 📦 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள். இரண்டு தராசுகள். ஒரு கையடக்கத் தொலைபேசி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. 🔍 பம்பலப்பிட்டி, ரிஜ்வே பிளேஸ் (Ridgeway Place) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதிச் சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் முதலில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, வெள்ளவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டது. 💰  கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவற்தறை  போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு எதிரான பொலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர்கின்றன! #SriLanka #PoliceSTF #DrugRaid #CrimeNews #IceDrugs #SafetyFirst #Bambalapitiya #Wellawatte #LKA #DrugFreeSL #BreakingNews

Related Posts