அமெரிக்காவின் பெரும்பகுதியைத் தாக்கி வரும் “விண்டர் ஸ்டார்ம் பெர்ன்” (Winter Storm Fern) என்ற சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரையிலான 2,000 மைல் தூரத்திற்கு இந்தப் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 📉 டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி மற்றும் டென்னிசி ஆகிய மாகாணங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கடந்த சில நாட்களில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். லூசியானாவில் கடும் குளிரால் (Hypothermia) இருவர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளில் புயல் தொடர்பான விபத்துகளில் இதுவரை பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதத்தினர், அதாவது 180 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த உறைபனி மற்றும் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். ⚠️ தேசிய வானிலை சேவை (NWS) வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலைகளில் பல அங்குல உயரத்திற்கு பனி மூடியிருப்பதால் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. “உயிருக்கு ஆபத்தான” இந்தச் சூழல் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதால் மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 21-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. #USWinterStorm #WinterStormFern #USAWeather #PowerOutage #SnowStorm #TravelAlert #ClimateChange #அமெரிக்கா #பனிப்புயல் #வானிலை #மின்தடை
❄️ அமெரிக்காவை உலுக்கும் “பெர்ன்” பனிப்புயல்: 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்தடை! – Global Tamil News
3