வடமாகாண விவசாயக்கண்காட்சி முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிமனையின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று இடம்பெற்றது.அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த விவசாயக் கண்காட்சியானது “காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி” எனும் தெனிப்பொருளில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கடந்த டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாடும் முதற்கட்டமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறிப்பாக விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் என்பன இடம்பெற்றன.அதனையடுத்து காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயக் கண்காட்சிகளை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.அந்தவகையில் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நெற்பயிற்செய்கை மேற்கொள்ளல், தேனிவளர்ப்பு, காளான் வளர்ப்பு, சேதன உரத் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, சுதேசமருத்துவப் பயிர்ச்செய்கை, ஒருங்கிணைந்த விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவசாய செயற்பாடுகள் குறித்து இதன்போது விருந்தினர்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தது.மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், உபாலி சமரசிங்க, வடமாகாண பிரதமசெயலாளர் திருமதி.தனுஜாமுருகேசன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
வடமாகாண விவசாயக் கண்காட்சி முல்லையில், அனர்த்த இழப்பீடுவழங்கும் செயற்பாடும் ஆரம்பித்துவைப்பு.
0
previous post