யாழில். இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி – Global Tamil News

by ilankai

இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) வீரவணக்கம் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின் போது, இங்கு உயிரிழந்த இராணுவத்தினருக்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்துவது மரபாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்திலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தின உரைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் இன்றைய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. Tag Words: #RepublicDayIndia #Jaffna #IPKF #IndianArmy #Palaly #SaiMurali #IndoSriLanka #WarMemorial #LKA #Diplomacy

Related Posts