முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

by ilankai

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை இன்றையதினம் வெளியிட்டுள்ளனர்.முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை நாளை மறுதினம் அதாவது 28.01.2026 தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான விலையில் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதன்மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நியாயமான முறையில் விற்பனை செய்ய முடியும்.அந்தவகையில் வெள்ளை, சிவப்பு நாட்டரிசி – கிலோ120, சிவப்பு, வெள்ளை சம்பா -கிலோ130, கீரிசம்பா கிலோ-140, ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட இருக்கின்றது. அத்தோடு கொள்வனவு செய்யப்படும் நெல் ஈரப்பதன் 14 வீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும்.நெல்லுடன் ஏனைய கலப்படங்கள் 1 வீதத்திற்குட்பட்டதாகவும் ஏனைய நெல்லினங்களின் கலப்பு 6 வீதத்திற்குட்பட்டதாகவும் சப்பி 9 வீதத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts