🏠 மன்னார் சாந்திபுரத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய இல்லம் கையளிப்பு! – Global Tamil News

by ilankai

மக்கள் நல்வாழ்வு மையத்தின் மனிதாபிமானப் பணியில் மற்றுமொரு மைல்கல்லாக, மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட 123-ஆவது இல்லம் இன்றைய தினம் (26.01.2026) திங்கட்கிழமை பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. கடந்த வருடம் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தினால், குடும்பம் ஒன்றின் வீடு முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்த அந்தப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குப் புதிய வீடொன்றை அமைத்துக் கொடுக்க மக்கள் நல்வாழ்வு மையம் முன்வந்தது. கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடனும் இந்த இல்லம் நிர்மாணிக்கப்பட்டது. இது மக்கள் நல்வாழ்வு மையத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 123-ஆவது வீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் நடைபெற்ற இல்லம் கையளிக்கும் நிகழ்வில்  முக்கிய விருந்தினர்களாக கலந்தகொண்ட க. கனகேஸ்வரன் (மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்) எம். பிரதீபன் (மேலதிக அரசாங்க அதிபர்) மக்கள் நல்வாழ்வு மையத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் வீட்டைத் திறந்து வைத்தனர்: பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் நோக்குடன் மக்கள் நல்வாழ்வு மையம் முன்னெடுத்து வரும் இந்த அறப்பணிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். #Mannar #Shanthipuram #HousingProject #Charity #CommunitySupport #SocialService #SriLanka #PeopleWellbeingCentre #மன்னார் #சாந்திபுரம் #மக்கள்நல்வாழ்வுமையம் #மனிதநேயம்

Related Posts