ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அத்துடன் இரு கட்சிகளின் கடந்த அரசியல் வரலாற்றையும் அவர் விமர்சித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் இணைகின்றமையால் – புதிய கூட்டணி அமைகின்றமையால் எமது ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் செயற்படுகின்றது. நாட்டு மக்கள் எம் பக்கமே உள்ளனர்.எனவே, ரணில் – சஜித் தரப்பினர் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் என்ன எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. – என்றார்.
நாட்டை அழித்த ரணில் – சஜித் ஒன்றிணைவதால் எமது ஆட்சிக்குப் பாதிப்பு இல்லை! நளிந்த கடும் விமர்சனம்
7