இணுவில் பொது நூலக கலை கலாசாரத்துறையின் ஆதரவில் இணுவில் கலை இலக்கிய வட்டம் நடத்தும் கவிதாயினி வித்தியாபாரதியின் அன்புள்ள டைரிக்கு கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு, இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் நேற்றையதினம் மாலை 4.00மணியளவில் பேராசிரியர் கந்தையா ஸ்ரீ கணேசன் (ஆங்கில மொழி கற்பித்தல் துறை யாழ். பல்கலைக்கழகம் . செயலாளர் , இணுவில் கலை இலக்கிய வட்டம்) தலைமையில் இடம்பெற்றது.மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து ஆரம்பமான இந்நிகழ்வு கடவுள் வாழ்த்து திரு .குனேந்திரன் அனுசன் (விரிவுரையாளர் இதேசிய கல்விக் கல்லூரி ) அவர்களும் வரவேற்புரையினை திரு. ம. ஜெயகாந்தன் (பொருளாளர், இணுவில் பொது நூலகம்) அவர்களும் நிகழ்த்தினார்.ஆசிரியுரையினை பேராசிரியர் சிவஶ்ரீ ம.பாலகைலாசநாதக்குருக்கள் (தலைவர், சமஸ்கிருதத்துறை இந்து கற்கைகள் பீடம் இயாழ்.பல்கலைக்கழகம் ,ஆதீனகுரு ஶ்ரீரங்க நாக பூசணி அம்மன் கோவில், நயினாதீவு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் சுதுமலை ) சிவஸ்ரீ .சோ.பிரசன்னாகுருக்கள் இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் )வாழ்துரைகளை பண்டிதை கலாபூஷணம் திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை (போசகர், திருநெறிய தமிழ் மறைக்கழகம் அவர்களும் சைவப் புலவர் திரு .சண்முகலிங்கம் முகுந்தன் (தலைவர்,இணுவில் தமிழ் சங்கம் )அவர்களும் நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றது வெளியீட்டு உரையினை திரு .ஈஸ்வரநாதபிள்ளை குமரன் சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை இயாழ் பல்கலைக்கழகம் அவர்கள் நிகழ்த்த நூல் மதிப்பீட்டு உரையினை பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் (வாழ்நாள் பேராசிரியர் பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களும் நிகழ்த்தினார்.முதல் பிரதிகளை திரு,திருமதி.நாராயணபிள்ளை கருணாகரன் தம்பதிகள் (லண்டன்) திரு.திருமதி ஆறுமுகம் செல்வராசா தம்பதிகள் லண்டன் பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து நூலாசிரியர் கௌரவிப்பு ஏற்புரையினை தொடர்ந்து நன்றியுரை முகுந்தன் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினை தொடர்ந்து உலா இனிதே நிறைவேறியது.
3
previous post