🚨 சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 'கெசல்வத்த தினுஷா' கைது: 72 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணை! – Global Tamil News

by ilankai

இந்தியாவின் சென்னையில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “கெசல்வத்த தினுஷா” என அழைக்கப்படும் ஹேவா பெடிகே தினுஷா சதுரங்கவிடம் வாழைத்தோட்ட காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 📌 சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.இவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கொழும்பு மத்திய பிரிவு மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் ஒப்புதலுடன் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி மேற்கொண்டமை, உள்ளிட்ட பெல கொலைகள் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவருக்கு எதிராக திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. ⚖️ வாழைத்தோட்ட காவல்துறையினர் குறித்த சந்தேக நபரிடம் பாதாள உலகக் குழு தொடர்புகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் முடிவில் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். #KeselwatteDinusha #CrimeNews #SriLankaPolice #InterpolRedNotice #ColomboCrime #LawAndOrder #Underworld #SriLankaNews #LegalAction

Related Posts