🚨 கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! – Global Tamil News

by ilankai

🚨 கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! கல்முனை தலைமையக காவற்துறைப்  பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 📍 மலையகப் பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமி, கல்முனையில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 15ஆம் திகதி இரவு, சந்தேக நபர் தன்னை அழைத்துச் சென்று வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். ⚖️ கடந்த 2026.01.18 அன்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கல்முனை தலைமையக காவற்துறை நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவற்துறையினர்  நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முறியடிக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கவும் கல்முனை காவற்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி பாரிய குற்றமாகும். #Kalmunai #CrimeNews #ChildProtection #Justice #SriLanka #PoliceInvestigation #SocialAwareness #StopChildAbuse #KalmunaiNews

Related Posts