வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் ஒருவர் கைது

by ilankai

அம்பலாங்கொடை – வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வதுகெதர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபர் இந்த ஆயுதத்தை மற்றொரு தரப்பினருக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  அம்பலாங்கொடை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts