நெடுந்தீவில் கடற்படையின் ஆடை தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

by ilankai

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.அவ்விஜயத்தின் போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டதுடன், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்கள், தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.மேலும், நெடுந்தீவில் செயல்பட்டு வரும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா துறையினர் ஆகியோரையும் சந்தித்த அமைச்சர், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தார். உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து, நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கும் விஜயம் மேற்கொண்ட தோழர் சுனில் ஹந்துன்நெத்தி, அங்கு நிலவும் வளக் குறைப்பாடுகள் மற்றும் நிர்வாகச் சவால்களை ஆராய்ந்ததுடன், பணியாளர்களுடனும் கலந்துரையாடி, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தினார். 

Related Posts