5
கண்டி – பேராதனை அகுனாவல, பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ் விபத்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முச்சக்கர வண்டியில் எரிபொருள் தீர்ந்ததால், வீதியோரத்தில் நிறுத்திவிட்டு எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த சாரதி மீது டிபென்டர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் முச்சக்கர வண்டியும் பலத்த சேதத்திற்குள்ளானது.டிபென்டர் வாகன சாரதியின் கவனயீனமான சாரத்தியத்தாலும் அதிவேகத்தாலுமே விபத்து இடம்பெற்றதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.