கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில், சுமார் 216 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமானின் மஸ்கட் (Muscat) நகரில் இருந்து வந்த பயணிகளிடமிருந்தே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரு வேறு சோதனைகளின் போது இவ்வாறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதலாவதாக மேறடகொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ரூ. 82.2 மில்லியன் பெறுமதியான 8 கிலோ 220 கிராம் போதைப்பொருள்கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது டெல்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர். இவர் ஒரு இரவு விடுதியில் (Nightclub) தனியார் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றுபவர் கைது செய்யப்பட்டுள்ளாா். அடுத்த நடவடிக்கையின் போது ரூ. 133.9 மில்லியன் பெறுமதியான 10 கிலோ 394 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 912 கிராம் ஹசிஷ் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடா்பில் மஸ்கட்டில் இருந்து வந்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனா் . விமான நிலைய சுங்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். மஸ்கட்டில் இருந்து ஒரே நாளில் இரு வேறு குழுக்களாக இவர்கள் வந்திருப்பது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Tag Words: #BIANews #DrugBust #SriLankaCustoms #PNB #NarcoticsSeized #Katunayake #MuscatToColombo #LKA #CrimeNewsSL
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 216 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்! – Global Tamil News
6