150-க்கும் மேற்பட்ட குற்றங்களை புரிந்துள்ள  மூதாட்டி மீண்டும் கைது! – Global Tamil News

by ilankai

பேர்மிங்காம் (Birmingham) மாநகர சபையினால் விதிக்கப்பட்ட தடையை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட டெப்ரா ஷா (Debra Shaw) என்ற 66 வயது பாட்டிக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட இந்த மூதாட்டி, தனது வாழ்நாளில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட குற்றங்களை புரிந்துள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் திகதி, பேர்மிங்காமில் உள்ள பூட்ஸ் (Boots) மருந்தகத்தில் இருந்து £50 பெறுமதியுள்ள ‘டெட் பேக்கர்’ (Ted Baker) வாசனைத் திரவியத் தொகுப்பைத் திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.பேர்மிங்காம் மாநகர மையப் பகுதிக்குள் நுழைய அவருக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தத் தடையை மீறி கடைக்குள் புகுந்து திருடியதை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளாா். வார்விக் வீதியைச் சேர்ந்த 66 வயதான டெப்ரா ஷா, நீண்டகாலமாகச் சிறு சிறு திருட்டுகள் மற்றும் பொது ஒழுங்கு மீறல்களில் ஈடுபட்டு வருவதால், பேர்மிங்காம் காவல்துறையினருக்கு மிகவும் தெரிந்த முகமாக மாறியுள்ளார். தொடர்ச்சியான விதிமீறல்கள் காரணமாக, அவருக்கு சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குற்றவாளிப் பாட்டியான டெப்ரா ஷாவிற்கு (Debra Shaw) தொடர்ச்சியாக சட்டத்தை மீறி வருவதால், அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது வயதைக் கருத்திற்கொண்டு அது இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக (Suspended Sentence) இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு மற்றும் நீதிமன்றச் செலவுகளுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேர்மிங்காம் மாநகர மையப் பகுதிக்குள் அவர் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் கடுமையான நிபந்தனைகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது.சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க அவருக்கு ‘குற்றவியல் நடத்தை உத்தரவு’ (Criminal Behaviour Order) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அவர் உடனடியாக சிறைக்குச் செல்ல நேரிடும். அவர் குறிப்பிட்ட சில கடைகளுக்குள் நுழைவதற்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts