0
காலி – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் கால்நடைகளைக் கட்டுவதற்காக இந்த வனத்திற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கான காரணம் என்ன அல்லது கொலையைச் செய்தது யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக மகாவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.