கிளிநொச்சியில் 39 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் திருட்டுத்தனமாக அறுவடை

by ilankai

கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் திருட்டுத்தனமாக நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின்  விசேட குற்றத்தடுப்பு பிரிவில் நேற்று  மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன்போது சுமார் 39 இலட்சம் ரூபா பெறுமதியான 10 ஏக்கர் நெல் திருட்டுத்தனமாக அறுவடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் கிளிநொச்சி பொலிஸார், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts