ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 📌 “என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலமும், நான் நேசிக்கின்ற மக்களும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.” மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த போதிலும் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமானது. எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் வைத்து தரப்போவதில்லை. எமது நற்புறவு, சினேகபூர்வ உரையாடல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் எமக்கு போதிய அரசியல் பலம் இருந்திருந்தால் இன்னும் பலவற்றை சாதித்திருக்கலாம். தற்போதுள்ள ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைந்து போயுள்ளனர். அவர்களுக்கு அனுபவமோ ஆற்றலோ போதாது. அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமாயின், மக்கள் எமக்கு மீண்டும் அந்த ஆணையை வழங்க வேண்டும். “கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு, கட்டமைப்புகளைச் சீரமைப்பதன் மூலம் ஈ.பி.டி.பி-யை மீண்டும் எழுச்சி கொள்ள வைக்க முடியும். இதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்.” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். #EPDP #DouglasDevananda #Jaffna #SriLankaPolitics #TamilPolitics #NationalConvention #EelamPeopleDemocraticParty #PoliticalUpdate
📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். – Global Tamil News
7