கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பணியகத்தில் நடந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியலிங்கம், ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், வரும் 30ஆம் நாள் நெடுங்கேணியில் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்!
7
previous post