அநுர ஆட்சியில் தவிடுபொடியாகிய மக்களின் எதிர்பார்ப்பு! ரமேஷ் பத்திரன பகிரங்கம்

by ilankai

அநுரவின் ஆட்சியின் கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாகச் செயற்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டுக் கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவில்லை. சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே அவர் செயற்பட்டார். இந்தநிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வழங்கி வைத்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரமேஷ் பத்திரன, நான் மீண்டும் அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளேன். தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக வாக்கு வங்கி உள்ள மாவட்டம்தான் காலி மாவட்டம். அங்கு சிறப்பான முறையில் பயணம் தொடரும்.இந்த ஆட்சியின் கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாகச் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts