இலங்கையின் ஜனநாயகம் மற்றும் அரச நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ‘அரசியலமைப்புப் பேரவை’ (Constitutional Council) மீண்டும் முழுமை பெறுகிறது. சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 முக்கிய இடங்களுக்கு, தத்தமது துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 👥 ஒஸ்டின் பிரணாந்து (Austin Fernando): 🛡️ முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். நிர்வாகத் திறமை மற்றும் சர்வதேச ராஜதந்திரத்தில் (முன்னாள் உயர்ஸ்தானிகர்) பல தசாப்த கால அனுபவம் கொண்டவர். பேராசிரியர் வசந்தா செனெவிரத்ன (Prof. Wasantha Seneviratne): ⚖️ சட்டத்துறையின் அறிவுப் பொக்கிஷம். கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவரான இவர், மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் சர்வதேச அளவில் மதிக்கப்படுபவர். ரஞ்சித் ஆரியரத்ன (Ranjith Ariyaratne): 📮 மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட நிர்வாகி. முன்னாள் தபால் மா அதிபர் மற்றும் கண்டி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய, பொது நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட சிரேஷ்ட அதிகாரி. 💡 இந்த நியமனங்கள் முக்கியமாக பாரக்கப்படுகிறது. குறிப்பாக அரசியலமைப்புப் பேரவை என்பது வெறும் கமிட்டி அல்ல; அது, சுயாதீன ஆணைக்குழுக்களைக் (தேர்தல், பொலிஸ், மனித உரிமைகள்) கண்காணிக்கும் உயரிய அமைப்பு. அரசியல் தலையீடற்ற நேர்மையான நியமனங்களை உறுதிப்படுத்தும் அரண். நிர்வாகம், சட்டம், பொதுச் சேவை என மும்முனை நிபுணத்துவம் பேரவையின் முடிவுகளை இனி இன்னும் பலப்படுத்தும். சபாநாயகரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால் இவர்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவுள்ளனர். #SriLanka #ConstitutionalCouncil #Governance #Democracy #AustinFernando #ParliamentSL #SriLankaNews #LegalExcellence #PublicService #LKA #அரசியல் #இலங்கை
🏛️ அரசியலமைப்புப் பேரவைக்கு 3 புதிய ஜாம்பவான்கள்: நாடாளுமன்றம் அதிரடி அங்கீகாரம்! – Global Tamil News
5