யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு

by ilankai

நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் மேற்கொண்டு வரும்பணிப் புறக்கணிப்பு இரண்டாம் நாளாக இன்றும்(24) தொடர்கிறது.நேற்று(23) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகிய போராட்டம், தொடர்ந்தும் இன்றைய தினமும் நடைபெறுகிறது.சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.பணிப் புறக்கணிப்பு காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. அதனால் தொலை தூரங்களிலிருந்து வருகைதரும் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

Related Posts