வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அதேபோல் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதே நேரத்தில், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும், 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இதற்கு மேலாக, ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.கொழும்பு – மன்னார் – காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடல் பிராந்தியங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில், வடகிழக்குத் திசையிலிருந்து வட திசை நோக்கி காற்று வீசும்.முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு ஊடாக களுத்துறை வரையிலான கடல் பிராந்தியங்களில், மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று அடிக்கடி அதிகரிக்கக் கூடும். இதனால், இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், பலத்த காற்றுடன் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
8