நாடாளுமன்ற பிரதிச் செயலாளர்  சமிந்த குலரத்ன  பணி இடைநீக்கம் – Global Tamil News

by ilankai

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன (Chaminda Kularatne) நேற்று (ஜனவரி 23, 2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் (Interdicted) செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சமிந்த குலரத்னவின் நியமனத்தின் போது சில முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் கடந்த செப்டம்பர் 2023 இல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மேலதிக செயலாளராகவும், லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது நியமனம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதுவரை இந்தப் பணி இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமிந்த குலரத்ன நாடாளுமன்றத்தின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியில் இருந்த இவர், நாடாளுமன்றச் செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைகள், சபாநாயகர் மற்றும் செயலாளர் நாயகத்திற்குச் சட்ட ரீதியான மற்றும் சபை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்கல். நாடாளுமன்றத் தகவல் அதிகாரியாகச் செயற்படல் ஆகிய பொறுப்புகளைக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது Tag Words: #ChamindaKularatne #ParliamentNews #SriLankaPolitics #BreakingNewsLKA #ParliamentSecretariat #LKA #AdministrativeSuspension

Related Posts