வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது எருக்கலம் பிட்டி மயானம் புனரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.இது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் நா.பகீரதன் கருத்து தெரிவிக்கையில்,எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் உள்ள மண்டபமானது புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற தனிநபரால் கட்டி தரப்பட்டது. அதனை கட்டி தந்தவர் அதனை மீளவும் புனரமைப்பதற்கு தற்போது தீர்மானித்துள்ளார்.எனவே அந்த நபரிடம் நிதியை பெற்று, பிரதேச சபையே அந்த வேவைத்திட்டத்தை செய்யலாம் என கூறினார்.இதன்போது குறுக்கிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், அவ்வாறு வழங்க முடியாது என்று கூறி முரணபாட்டில் ஈடுபட, குறுக்கிட்டு உறுப்பினர் பகீரதன் “நீங்கள் பேருந்து தரிப்பு நிலையத்தை இடிக்க கையூட்டு பெற்றீர்கள்” என்றார். இதன்போது அங்கு கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு சபையில் அமைதியின்மை நிலவியது.இதன்போது குறுக்கிட்ட தவிசாளர் ஜெசீதன் உறுப்பினர் தயாபரனை பார்த்து “சட்டத்தை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையை நடாத்த வேண்டி வரும். அவர் தனது கருத்தை சொல்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். நீங்கள் குறுக்கிடாதீர்கள். அந்த மண்டபத்தை கட்டியவரே மீள் புனரமைக்கட்டும்” என்றார்.
சட்டத்தை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையை நடாத்துவேன்.! தவிசாளர் ஜெசீதன் எச்சரிக்கை
3