பல தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய 34 வயதுடைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவர், இன்று (24.01.26) மாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். 🚨 சர்வதேச காவற்துறையினரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர் இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார். ⚖️ சந்தே நபருக்கு எதிரான பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொடூரமான குற்றச் செயல்களில் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்: •🗡️ 2015: கேசல்கவத்த பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி ஒருவரைக் கொலை செய்தமை •2018: கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமை. •2021: மட்டக்குளி பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரைக் கொலை செய்தமை. •2021: கொட்டாஞ்சேனை பகுதியில் கைக்குண்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்தமை. •ஏனைய குற்றங்கள்: கேசல்கவத்த, வாழைத்தோட்டம் மற்றும் புளுமெண்டல் ஆகிய பகுதிகளில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 🚔 கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்கப்பட்ட குறித்த சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக கேசல்கவத்த காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதிப் காவற்தறை மா அதிபரின் நேரடி வழிகாட்டலில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளுக்கு எதிரான இவ்வாறான சர்வதேச ஒத்துழைப்பு, பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. #CrimeNews #SriLankaPolice #Interpol #RedNotice #CID #CrimeUpdate #SriLanka #India #Justice #PublicSafety #SLNews #PoliceAction #Underworld
🚨 இலங்கையில் இன்டர்போல் 'ரெட் நோட்டீஸ்' குற்றவாளி இந்தியாவில் கைது: இலங்கை காவற்துறையினரிடம் ஒப்படைப்பு! – Global Tamil News
2