சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026 உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆற்றிய உரை, ஐரோப்பாவைக் கடந்து உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 🎙️ ஜனாதிபதி ட்ரம்ப்பின் ‘கிரீன்லாந்து’ விவகாரம் மற்றும் புதிய வரிக் கொள்கைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட மக்ரோன், சர்வதேச விதிகள் மீறப்படுவதை வன்மையாகக் கண்டித்தார்: “வலியோன் வகுத்ததே சட்டம்” என்ற நிலைக்கு உலகம் தள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி மக்ரோன், சர்வதேச சட்டங்கள் காலால் மிதிக்கப்படுவதையும், ‘புதிய காலனித்துவ’ (New Imperialism) போக்குகள் உருவாவதையும் ஐரோப்பா வேடிக்கை பார்க்காது எனவும், ஐரோப்பிய ஒன்றியம் தனது இறையாண்மையைப் பாதுகாக்க ‘டிரேட் பசூக்கா’ (Trade Bazooka) எனும் பொருளாதார எதிர்ப்பு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்காது என எச்சரித்தார். 🤝 மக்ரோனின் இந்த ‘துணிச்சலான’ உரை பிரான்ஸ் உள்நாட்டு அரசியலில் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மக்ரோனை கடுமையாக எதிர்க்கும் வலதுசாரி (Right-wing) மற்றும் இடதுசாரி (Left-wing) கட்சிகள் கூட இம்முறை அவரைப் பாராட்டியுள்ளன. “பிரான்சின் கௌரவத்தையும், ஐரோப்பாவின் தனித்துவத்தையும் அமெரிக்காவிடம் அடகு வைக்காமல் பேசிய மக்ரோனின் தேசப்பற்று வியக்க வைக்கிறது” எனப் புகழ்ந்துள்ளனர். “சர்வதேச விதிகள் மற்றும் அமைதி குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் தற்போதைய உலகச் சூழலுக்கு மிகவும் அவசியம்” என ஆதரவு தெரிவித்துள்ளனர். 🕶️ இதனிடையே உரையின்போது மக்ரோன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி (Aviator Sunglasses) சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. கண் கோளாறு காரணமாக அவர் அதை அணிந்திருந்தாலும், சமூக வலைதளங்களில் அது அவரின் ‘தனித்துவமான பாணி’ (Style Statement) ஆகவும், ஒரு ‘போர் வீரனின்’ அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. #Macron #Davos2026 #WEF2026 #France #EuropeSovereignty #GlobalPolitics #TrumpVsMacron #TradeBazooka #FrenchPolitics #InternationalLaw #மக்ரோன் #டாவோஸ் #ஐரோப்பா #சர்வதேசசெய்திகள்
🌍 “உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல!” – டாவோஸில் கர்ஜித்த மக்ரோன்: பிரான்சில் மலரும் புதிய அரசியல் ஒற்றுமை!🔥 – Global Tamil News
0