தெஹிவளை துப்பாக்கிச் சூடு: வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

by ilankai

தெஹிவளையில் கடந்த டிசம்பர் 6ஆம் திகதி இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர், தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.விசாரணைகளின் படி, கடந்த டிசம்பர் 6ஆம் திகதி தெஹிவளை – வேரத்தன்ன வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இவர் இரண்டாவது துப்பாக்கிதாரியாக செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவத்தில், உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியைப் பயன்படுத்திய மற்றுமொரு சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டலிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

Related Posts