கடல்சார் பாதுகாப்பில் முன்னணியில் அமெரிக்கப் படைகள்! – Global Tamil News

கடல்சார் பாதுகாப்பில் முன்னணியில் அமெரிக்கப் படைகள்! – Global Tamil News

by ilankai

கரீபியன் கடல் பகுதியில் சட்டவிரோத எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் கப்பல்களை இடைமறித்து, தாய்நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமெரிக்க ராணுவப் படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பீடத்தின் (#SOUTHCOM) பொறுப்பின் கீழ் நிலைகொண்டுள்ள ராணுவப் படைகள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி #OpSouthernSpear (ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்) திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றன. இப்பணியில் அமெரிக்க கடலோர காவல்படை (U.S. Coast Guard), உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Department of Homeland Security), மற்றும் நீதித்துறை (Justice Department) ஆகியவற்றுடன் இணைந்து ராணுவம் செயல்படுகிறது. அமெரிக்கர்களுக்கும், பிராந்திய அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் “டார்க் ஃபிளீட்” (Dark Fleet – கள்ளச்சந்தை கப்பல்கள்) மற்றும் தீய சக்திகளுக்கு ஆதரவளிக்கும் சட்டவிரோத எண்ணெய் வணிகத்தைத் தடுத்தல் முக்கிய இலக்காக கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் கரீபியன் கடல் பகுதியில் தடைகளை மீறிச் சென்ற Motor Vessel Sagitta மற்றும் M/T Sophia போன்ற கப்பல்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கா கூறகிறது. பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்வழி வணிகத்தை உறுதி செய்வதே தமது இலக்கு. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இடமில்லை என்பதில் தாம் உறுதியாக இரு்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

Related Posts