4
தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் 2வது நாளாக இன்று (24) பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.இதன் காரணமாக வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.தூரப் பகுதிகளில் இருந்து மருந்துகள் எடுப்பதற்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.அத்தோடு அவசர நோயாளர் பிரிவு வழமைபோன்று இயங்கியது.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.