தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 270 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இந்தப் பெருமளவு போதைப்பொருள் தொகையை ‘தெஹிபால’ என அழைக்கப்படும் நபர் நாட்டுக்குள் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் நடத்திய இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், முதற்கட்டமாக ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அதிலிருந்து சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகும் கடற்படையினரின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தப் படகிலிருந்து மேலும் ஆறு சந்தேகநபர்கள், இரண்டு செய்மதித் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் சுமார் 70 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் நாளை (25) கரைக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தெற்கு கடலில் 270 கிலோ போதை பொருள் பறிமுதல்: 11 பேர் கைது!
4