6
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச நீதி கேட்கும் போராட்டத்திற்கு உங்கள் ஆலோசனை எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கேட்டு தொடங்கிய, சர்வதேசம் நோக்கிய போராட்டமும் அறிக்கைகளும் சர்வதேச அரங்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த காரணமான அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தம்பிதுரை முத்துக்குமாரிற்கு கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.