6
சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், நான்கு பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்களுடன், 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இந்த நிலையில், கஸ்ஸப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக இரத்த பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.