மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்றிரவு (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.நேற்றிரவு சுமார் 8 மணியளவில், ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதி, புற்றுநோய் வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், எதிரே வந்த கப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றையவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மேலும், விபத்தில் காயமடைந்த இன்னொரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த இருவரும் ஏறாவூர் வாளியப்பா ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் வசித்து வந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏறாவூரில் மோட்டார் சைக்கிள் விபத்து; பலியான இரு இளைஞர்கள்
4