கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தீர்கள். எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையையும் கொண்டுவரப்போவதாக கூறினீர்கள். இப்போது அந்தப் பிரேரணை எங்கே? ஏன் இன்னும் முன்வைக்கவில்லை என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்தச்சட்ட விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி மறுசீரமைப்பில் 6ஆம் தர மொடியுலில் சிறு தவறு ஏற்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொண்டு சரிசெய்வதாக கூறியுள்ளோம். அவ்வாறு இருந்தும் எனக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் பலவாறான விமர்சனங்களை முன்வைத்தீர்கள்.அது தவிர எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவரப்போவதாக சொன்னீர்கள். பலரிடம் கையெழுத்தும் வாங்கினீர்கள். இவ்வாறு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றீர்கள். இந்த நிலையில் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எங்கே? அதனை சமர்ப்பித்துள்ளீர்களா? நான் இல்லாத நேரத்தில் அது தொடர்பில் பலவாறாகப் பேசினீர்கள். ஆனால் இப்போது எங்கே எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை? அவதூறாகப் பேசி பலவாறான விமர்சனங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பரப்பி அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைத்தாலும் அது முடியாது. கல்விக்கான மறுசீரமைப்பை மேற்கொண்டு கல்வியின் முன்னேற்றத்திற்காக நாம் உழைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசைக் கவிழ்க்க எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எங்கே?
6