📢 “எங்கே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை?” நாடாளுமன்றில் பிரதமர் ஹரினி: – Global Tamil News

by ilankai

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சிகளின் சவால்களைப் புன்னகையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொண்டார். கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்த அரசியல் நகர்வுகள் குறித்து அவர் எழுப்பிய கேள்வி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 🔹 “நான் வந்துட்டேன்… எங்கே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை?” என நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். “ஜனாதிபதியை பதவி நீக்க முடியாததனால் பிரதமரை பதவி நீக்க முனைந்தீர்கள், இன்று காலையே நாட்டுக்கு வந்த நான், நம்பிக்கையில்லாப் பிரேரனையை எதிர்கொள்ள ஓடோடி வந்தேன் ஆனால் அதனை காணவில்லையே” என சிரிப்பொலியுடன் பேசினார். அத்துடன் நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவந்து நேரத்தை வீணடி்க்க வேண்டாம் என்னை தெரிவுசெய்த நாட்டுமக்கள் வீட்டுக்கு போகச் சொன்னால் நானாகவே போவேன் என தெரிவித்துள்ளார். வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், செயலில் காட்டத் தயார் என்பதை அவர் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். அந்த வகையில் குழப்பமான அரசியல் சூழலில், அரசாங்கத்தின் பலத்தை நிரூபிக்கத் தான் தயாராக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் “சவால்களைக் கண்டு அஞ்சுபவர்கள் நாமல்ல; ஜனநாயக ரீதியாக எதனையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.” என வலியுறுத்தி உள்ளார். #HariniAmarasuriya #ParliamentLK #NoConfidenceMotion #SriLankaPolitics #LKA #PrimeMinister #PoliticalNews #HariniSpeaks #TamilNews #BreakingNewsLK #NPP #ConstitutionalCrisis

Related Posts