சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவிய கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 26 (திங்கள்) முதல் பெப்ரவரி 4 (புதன்) வரை இந்த வானிலை மாற்றம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் (Across hills) பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பேர்மிங்காமில் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பனிப்பொழிவினால் மூடப்பட்ட பகுதியில் பனி திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. . வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வீசும் குளிர் காற்று மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த வெப்பநிலை வீழ்ச்சி ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நீண்டகால முன்னறிவிப்பின்படி, அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் காற்றழுத்த மண்டலங்கள் வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றுடன் மோதுவதால் இந்த பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஸ்கொட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் பர்மிங்காம் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வழுக்கும் தன்மை (Ice) மற்றும் அடர் மூடுபனி நிலவக்கூடும். இது பயண நேரத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் பனிப்பொழிவு தீவிரமடைந்தால், தண்டவாளங்களில் பனி உறைவதாலும், ஓடுபாதைகளைச் சுத்தம் செய்ய வேண்டியதாலும் சில புகையிரத மற்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமடையலாம் என்பதுடன் கடும் காற்றுடன் கூடிய பனிப்பொழிவு இருந்தால், சில பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. (இன்று – ஜனவரி 23, 2026) பிரித்தானியாவின் பல பகுதிகளில் தற்போது வெப்பநிலை 6°C முதல் 10°C வரை (சராசரி நிலை) காணப்படுகிறது. இருப்பினும், வரும் ஞாயிறு முதல் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து, சில இடங்களில் -5°C முதல் -9°C வரை செல்லக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Tag Words: #UKWeather #MetOffice #SnowWarning #BirminghamWeather #ScotlandSnow #WeatherUpdate2026 #WinterWatch
❄️ பிரித்தானியாவின் பல பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு – Global Tamil News
7