பிரித்தானியாவின் ஒவ்வொரு வீட்டையும் சூழலியல் ரீதியாக மேம்படுத்தவும், அதன் மூலம் குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சேமிக்கவும் பிரித்தானிய அரசு புதிய திட்டங்களை (Warm Homes Plan) அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 15 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டில் 5 மில்லியன் வீடுகளை 2030-க்குள் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சூரிய சக்தி தகடுகள் (Solar Panels), வெப்பப் பம்புகள் (Heat Pumps) மற்றும் காப்பு அமைப்புகளை (Insulation) நிறுவுவதன் மூலம் குடும்பங்களின் மின்சாரக் கட்டணம் பெருமளவு குறையும் என்பதுடன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்குச் சூரிய சக்தி தகடுகளை முழு இலவசமாகப் பொருத்தவும் புதிய விதிகள் வழிவகுக்கின்றன. மேலும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாகன சாரதிகள் ஆண்டுக்கு £1,000-க்கும் அதிகமான பணத்தைச் சேமிக்க முடியும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் முன்பகுதியில் (Driveway) மின்சார வாகன (EV) சார்ஜிங் பொயிண்டுகளைப் பொருத்துவதற்கான அனுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய முன்மொழிவுகளின்படி, ஒரு தனி சார்ஜிங் யூனிட்டைப் பொருத்த இனி பிரத்தியேகத் திட்ட அனுமதி (Planning Permission) கோர வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சார்ஜிங் பொயிண்ட் பொருத்த £350 வரை அல்லது 75% வரை மானியம் (EV Chargepoint Grant) பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. Tag Words: #UKHomeEnergy #GreenTechnology #EVCharging #SaveEnergyUK #WarmHomesPlan #UKMotorists #SolarPower2026 #Sustainability
🏠 பிரித்தானியாவின் புதிய பசுமை விதிகள் – Global Tamil News
4