கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா (Ditwa) புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கான முதற்கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட பல்வேறு மதத் தலங்களின் நிர்வாகத்தினரிடம் நிதி உதவிகள் கையளிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 65 வழிபாட்டுத் தலங்களுக்கு முதற்கட்டமாக தலா 25,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 42 இந்து ஆலயங்கள், 17 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 06 பள்ளிவாசல்கள் உள்ளடங்குகின்றன.மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள 3 பௌத்த விகாரைகளுக்கும் விரைவில் இந்த நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். Tag Words: #MannarNews #DitwaCyclone #ReliefAid #SriLankaGovernment #ReligiousHarmony #FloodRelief #MannarGA #LKA
⛪ மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு. – Global Tamil News
4