திருகோணமலை கோமரங்கடவல -அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் குறித்த மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.எட்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குறித்த மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ சிப்பாய் கைது!!
0