உலகளாவிய மாற்றத்தில் பெண் தலைமைத்துவம் – பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உரை: உலகப் பொருளாதார மேடையில் ஹரினி: World Women Davos Agenda 2026 by admin January 23, 2026 written by admin January 23, 2026 “இன்று உலகம் முழுவதும் காலநிலை மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், பொருளாதார உருமாற்றம், இராணுவமயவாக்கம், அரசியல் ஸ்திரமற்ற நிலை மற்றும் சமூக இயக்கங்கள் எனப் பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இத்தகைய மாறிவரும் சூழலில், பெண்ணிய தலைமைத்துவம் (Feminist Leadership) என்பது மிகவும் அவசியமானது. பெண் தலைமைத்துவம் என்பதை வெறும் பதவிகளாகவோ அல்லது அடையாளங்களாகவோ மட்டும் நாம் கருதிவிட முடியாது. பெண்ணியக் கண்ணோட்டத்தில், தலைமைத்துவம் என்பது தனிநபர் அதிகாரம் அல்லது படிநிலை முறைகளைக் கடந்தது. அது உறவுமுறை சார்ந்தது, கட்டமைப்பியல் சார்ந்தது மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில் கட்டமைப்புகளை மாற்றுதல் வேண்டும். தற்போதுள்ள நிறுவன ஏற்பாடுகள் மற்றும் சமச்சீரற்ற அதிகார உறவுகளைக் கேள்விக்குட்படுத்தி, அவற்றை மாற்றியமைக்கும் திறன் பெண்ணிய தலைமைத்துவத்திற்கு உண்டு. அடுத்து பொறுப்புக்கூறல் மற்றும் அக்கறை என்பத கூட்டுச் செயல்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை ஆகியவற்றை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டது. சமூக நீதி என்பது வெறும் பிரதிநிதித்துவத்திற்காக மட்டும் இல்லாமல், சமூகத்தில் சமத்துவம், நீதி மற்றும் உள்ளடக்கிய மாற்றத்தை (Inclusive Transformation) ஏற்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும். உலகெங்கிலும் பெண்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் தங்களை நிலைநிறுத்தி வந்தாலும், அவர்களின் பங்களிப்புகள் இன்றும் முறையாக மதிக்கப்படுவதில்லை. ஆணாதிக்கக் கொள்கைகள், சமூக-கலாச்சார எதிர்பார்ப்புகள் மற்றும் வரலாற்று ரீதியான ஏற்றத்தாழ்வுகள் பெண்களின் தலைமைத்துவப் பயணத்திற்கு இன்றும் முட்டுக்கட்டையாக உள்ளன. குறிப்பாக வர்க்கம், இனம், புவியியல் மற்றும் கல்வி போன்ற பல்வேறு தளங்களில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு இந்தச் சவால்கள் இன்னும் அதிகமாக உள்ளன. இந்தத் தடைகளைத் தகர்த்து, அதிகாரத்திற்கான சமமான வாய்ப்புகளை உருவாக்குவதே எமது இலக்காகும்.”
உலகளாவிய மாற்றத்தில் பெண் தலைமைத்துவம் – பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உரை: – Global Tamil News
2