🎨  இந்தோனேசியாவின் முனா தீவில்  உலகின் மிகப்பண்டைய கலைப்படைப்பு  கண்டுபிடிப்பு – Global Tamil News

by ilankai

இந்தோனேசியாவின் முனா தீவில் கண்டறியப்பட்டுள்ள இந்த குகை ஓவியம், மனித குல வரலாற்றின் கலைத் திறனை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள சுண்ணாம்பு குகை ஒன்றில் மேற்கொண்ட ஆய்வின் போது, இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியங்களை மீட்டெடுத்துள்ளனர். குகையின் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் இயற்கை நிறமிகளை ஊற்றி இந்த ‘கை அச்சு’ ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சில ஓவியங்களில் விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் நுணுக்கமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. விலங்குகளின் உடல் மற்றும் பறவைகளின் தலைகளைக் கொண்ட மனித உருவங்களும் (Therianthropes) அங்கு காணப்படுகின்றன. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி இந்த ஓவியங்கள் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானவை. இது உலகளாவிய ரீதியில் மற்ற கண்டுபிடிப்புகளை விஞ்சியுள்ளது முன்னதாக ஸ்பெயினில் கண்டு பிடிக்கப்பட்ட கை அச்சு 66,700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதுடன் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது 73,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். எனினும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டவை கற்களில் செதுக்கப்பட்ட குறியீடுகள் மட்டுமே, ஆனால் இந்தோனேசியாவில் இருப்பது முழுமையான ‘ஓவியம்’ என்பது குறிப்பிடத்தக்கது சுமார் 67,800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் மிகவும் நுணுக்கமான முறைகளைக் கையாண்டுள்ளனர். கைகளைச் சுவரில் வைத்துவிட்டு, வாய்க்குள் இயற்கை நிறமிகளை (Ochre) வைத்துக்கொண்டு அதன் மேல் ஒரு குழல் மூலம் ஊதியுள்ளனர். இது கையைச் சுற்றி ஒரு அழகான அச்சினை உருவாக்கியது. சில ஓவியங்களில் விரல் நுனிகள் மிகக் கூர்மையாக மாற்றப்பட்டுள்ளன. இது அந்த கால மனிதர்களின் கற்பனைத் திறனை அல்லது அவர்கள் பயன்படுத்திய விசித்திரமான சடங்குகளைக் காட்டுகிறது. மனிதப் பரிணாம வளர்ச்சி குறித்த புதிய பார்வை இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றைத் தலைகீழாக மாற்றியுள்ளது. மனிதர்கள் ஆபிரிக்காவிலிருந்து வெளியேறி ஆசியாவிற்கு வந்த உடனேயே இவ்வளவு நேர்த்தியான கலைகளை உருவாக்கத் தொடங்கிவிட்டனர் என்பதை இது நிரூபிக்கிறது. மனித உருவங்களையும் விலங்கு உருவங்களையும் இணைத்து வரைந்திருப்பது (Therianthropes), அக்கால மனிதர்களுக்கு மத நம்பிக்கைகள் அல்லது கதை சொல்லும் ஆற்றல் இருந்ததைக் காட்டுகிறது. Tag Words: #Archaeology #AncientArt #Indonesia #CavePainting #HumanHistory #MunaIsland #OldestArt #Discovery2026 #LKA

Related Posts