எமது ஆட்சியை எந்த வகையிலும் எதிரணிகளால் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாகத் தெரிவித்தார்.அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தேசிய மக்கள் சக்தி அரசுக்கு மக்கள் ஆதரவு தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என்றும், அதனால் அரசியல் ரீதியான எந்தச் சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களைப் பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்றது.கடந்த கால ஆட்சிகளால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு திடமான முடிவுகளை எடுத்துள்ளது எதிரணிகள் இந்த அரசை நிலையற்றதாக காட்ட முயற்சிக்கின்றன, அவை அனைத்தும் அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டுள்ளதால், இவ்வாறான முயற்சிகள் எதுவும் வெற்றியடையாதுஎதிர்வரும் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடும். நாட்டு மக்கள் அரசின் செயற்பாடுகளை நேரடியாக அனுபவித்து வருவதால், மீண்டும் வலுவான ஆதரவை வழங்குவார்கள்நாட்டின் ஊழல் அரசியலை முற்றாக ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்கு, அதற்காக எந்த அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் செயற்படுகிறது சுத்தமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அரசு உறுதியாக இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.
நாட்டின் ஊழல் அரசியலை முற்றாக ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்கு
6