தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும் என்றும், அதற்கான சட்டமூலங்கள் ஜனநாயக முறையிலேயே நிறைவேற்றப்படும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்று (ஜனவரி 23, 2026) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார். மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடத்தியே தீருவோம். எமது அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் பிற்போடாது. மாகாண சபை தேர்தலுக்கான சட்டமூலம் இன்னும் முழுமையாக இயற்றப்படவில்லை. அதனை விரைவில் தயார் செய்து தேர்தலை நடத்துவோம். நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. சட்டமூலங்களை எம்மால் எளிதாக நிறைவேற்ற முடியும். பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவைப் போல சர்வாதிகாரமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ சட்டங்களை இயற்ற மாட்டோம். மக்களின் கருத்துக்களைக் கேட்டு, அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக முறையிலான சட்டமூலங்களையே நிறைவேற்றுவோம் என்றாா். Tag Words: #NPP #Ilangkumaran #ProvincialCouncilElection #JaffnaNews #SriLankaPolitics #Democracy #SystemChange #LKA #Election2026
ஜே.ஆர் போல தேசிய மக்கள் சக்தி தான்தோன்றித்தனமாக சட்டங்களை இயற்றாது – Global Tamil News
5