அனுர அரசாங்கம் இனவாத அரசாங்கம் என தொடர்ச்சியாக கூறி வருகிறோம்.அதற்கு பல விடயங்களை உதாரணமாக கூற முடியும்..நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் ‘ பல்கலைக்கழக கவுன்சில்’ உள்ளது.தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ பல்கலைக்கழக கவுன்சில்’ உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தில் 8 தமிழர்கள், 5 முஸ்லிம்கள், 2 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்.ஆனால் அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 5 தமிழர்கள், 3 முஸ்லிம்கள், 7 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பஸ்களில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாயை திறந்துள்ளார். ஆதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அதேவேளை சாணக்கியன் பாராட்டுப்பத்திரம் வாசித்துள்ளார்.
கிழக்கில் அதிகம் சிங்களவர்கள்?
7
previous post