வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இலங்கையின் பல மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பகுதிகளாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது நிலவும் இரவு நேரக் குளிரான வானிலை குறைந்து, குறைந்தபட்ச வெப்பநிலை சற்று உயர்வடையும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஜனவரி 29 ஆம் திகதி முதல் மீண்டும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் . தற்போது அறுவடைக்காலம் என்பதால், நெல் அறுவடை செய்பவர்களும், நெல்லை உலர விடும் விவசாயிகளும் இந்த மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார். Tag Words: #JaffnaWeather #SriLankaRain #WeatherUpdate2026 #NorthernProvince #AgricultureAlert #JaffnaUniversity #MonsoonUpdate #FarmerAdvisory
🌧️ வட மாகாணத்திற்கு கனமழை எச்சரிக்கை – Global Tamil News
3