இன்று (ஜனவரி 22, 2026) அதிகாலை நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அண்மைக்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். இன்றைய வெப்பநிலை நுவரெலியாவில் 3.5°C யும் பண்டாரவளையில் 11.5°C ஆகவும் பதுளையில் 15.1°C ஆகவும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°C ஆகவும் காணப்படுகின்றது. இன்று பதிவான 3.5°C வெப்பநிலையைத் தொடர்ந்து, நுவரெலியாவின் பல பகுதிகளில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி (Ground Frost) உருவாகக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகாலை வேளையில் நுவரெலியாவின் சில இடங்களில் துகள் உறைபனி காணப்படலாம். இது தேயிலை மற்றும் மரக்கறிச் செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளை (ஜனவரி 23, 2026) முதல் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 23 முதல் 26 வரை மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், நிலவும் கடும் குளிர் சற்று குறைய வாய்ப்புள்ளது (மேகமூட்டம் காரணமாக இரவு நேர வெப்பநிலை சற்று உயரக்கூடும்). Tag Words:#NuwaraEliya #ColdWeather #SriLankaWeather #Winter2026 #MeteorologyDepartment #HillCountry #Mist #Frost #LowestTemperature
❄️ நுவரெலியாவில் கடும் குளிர்: வெப்பநிலை 3.5°C ஆக பதிவு – Global Tamil News
3