5
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு இந்த மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று சம்பந்தப்பட்ட மனுக்களை பரிசீலித்தது.